தமிழகத்தில் காலி மனைகளுக்கான வரிஉயர்வு - தமிழக அரசு

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (16:16 IST)
தமிழகத்தில் காலி மனைகளுக்கான  வரியையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில்  மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிக பகுதிகளில் சொத்து வரியை உயர்த்தி உத்தரவிட்டது.

இதற்கு பலதரப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சொத்து வரி உயர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காலிமனை மீதான வரிவிதிப்பை 100 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும்  நகராட்சி ஆணையர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்கு நர்   ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், சொத்து  வரி சீராய்வு பணிகள் முடிந்து, வழக்கமான வரிவிதிப்புகளை மேற்கொள்ள 3 மாத கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்