“திமுகவுடன் இருப்பதைப் போல, அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என்றும் அது என் விருப்பம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் கலவையாகும் என்றும், இரண்டையும் பிரிக்க முடியாது என்றும், ஒற்றுமையே பலம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.