தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:24 IST)
தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னை குடிநீர் தேவைக்காக தனியார் தண்ணீர் லாரிகள் சென்னையின் புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக் கூறி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று காலை முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த தண்ணீர் லாரியும் இயங்கவில்லை. 
 
இந்த நிலையில் தண்ணீர்  லாரிகள் உரிமையாளர்கள் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனருடன் இன்று காலை நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எட்டிய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று இரவு முதல் தண்ணீர் லாரிகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்