கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா கடந்த மாதம் 26 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அதன்பின்னர் அவரது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் சுயேட்சை எம்.எல். ஏ உள்பட 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி பாஜக எம். எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மூத்த எம்.எல்.ஏவான உமேஷ் கட்டி, பாகசந்திர ஜார்கிகொளி, ரேணிகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்ட பலபேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.