இலங்கை தமிழர்கள் படுகொலையின்போது டெல்லி சென்று போராட்டம் நடத்தாதது ஏன்? திமுகவுக்கு பாஜக கேள்வி

புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:43 IST)
காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சென்று போராட்டம் நடத்தும் திமுக எம்பிக்கள், இலங்கையில் 1.5லட்சம்  தமிழர்கள் கொல்லப்படும்போது டெல்லி சென்று போராட்டம் நடத்தாதது ஏன் என்று பாஜக பிரமுகர் கோபிகிருஷ்ணா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
காஷ்மீர் மீது இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்பிக்கள் தற்போது போராட்டம் நடத்துவது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போராட்டமாக புரிந்து கொள்ளப்படாதா? என்ற கேள்வியையும் பாஜகவினர் எழுப்பியுள்ளனர்.
 
 
இந்த நிலையில் டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி காஷ்மீர் குறித்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, தற்போது திமுக நடத்தும் போராட்டத்திலும் கலந்து கொள்வது முரண்பாடாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
 
இந்த நிலையில் திமுகவின் இந்த போராட்டம் குறித்து தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, 'காஷ்மீரத்தில் ஜனநாயகத்தை காக்க திமுக தலைவர் டெல்லி சென்று போராட்டமாம்? யாருக்கு ஆதரவாக? தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக ஜனநாயகப் போர்வையில் போராடும் தேசவிரோத திமுக? அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு? என்று அன்று சொன்னதை பயந்து கைவிட்ட திமுகவின் தேசபக்தி???.. எங்கே? என தேடுகிறோம்! என சமீபத்தில் தனது டுவிட்டரில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்