பச்சை கொடி காட்டிய தலைமை: ஆக்‌ஷனின் இறங்கிய செந்தில் பாலாஜி!

புதன், 21 ஆகஸ்ட் 2019 (11:37 IST)
கரூரில் 3 நாட்களுக்கு மாபெரும் போராட்டம் நடத்த தலைமை அனுமதி கொடுத்துள்ளதால் அக்‌ஷனில் இறங்கியுள்ளார் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி.
 
அதிமுகவில் இருந்து அமமுகவிறகு தாவி அங்கு டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, திமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
 
தேர்தல் பிரச்சார சமயத்தில் இருந்தே எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜிக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கும் ஒத்துப்போகவில்லை. இன்று வரை அது தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது. 
இந்நிலையில் செந்தில் பாலாஜி, அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1000 கன அடி தண்ணீரை 2,000 கன அடியாக உயர்த்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். ஆனால், ஆட்சியர் இதனை கண்டுக்கொள்ளவே இல்லை. 
 
இதனால் கடுப்பான செந்தில் பாலாஜி, உடனடியாக தலைமையிடம் இது குறித்து தெரிவித்து ஆட்சியரை எதிர்த்து போராட்டம் ஒன்று நடத்த அனுமதி கேட்டார். தலைமையும் க்ரீன் சிக்னல் காட்ட ஆக்ஷனில் இறங்கிவிட்டார். 
 
ஆம், இன்னும் 3 நாட்களில் நீரின் அளவி அதிகரிக்கப்படவில்லை என்றால் ஆட்சியரை எதிர்த்து கரூரில் தனது ஆதரவாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் செந்தில் பாலாஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்