நாளை முதல் நீலகிரி, கோவையில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (11:58 IST)
வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நிலையில் நாளை முதல் தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில் இன்று சென்னை அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன்னியாக்குமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்