தீவிரமடையும் பருவமழை.. சிக்கலில் மக்கள் – முதல்வர் திடீர் ஆலோசனை!

வியாழன், 11 நவம்பர் 2021 (10:39 IST)
தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் நிலையில் இன்று முதல்வர் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், டெல்டா பகுதிகளில் கனமழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தல், மக்களை மீட்டல், நிவாரண பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பலவற்றை குறித்தும் முதல்வர் ஆலோசிப்பார் என கூறப்படுகிறது. மேலும் டெல்டா பகுதியில் மழையால் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ள நிலையில் அவற்றை ஆய்வு செய்ய 2 நாட்களில் முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கு பயணிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்