இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் விருதுநகரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து விருதுநகர் ஆட்சியர் மேகநாத் ரெட்டி “இனிமே விடுமுறை கிடையாது தம்பி. சூரியன் வந்துட்டு.. ஸ்கூலுக்கு போகணும். படி – விளையாடு – கொண்டாடு- ரிப்பீட்டு” என கூறியுள்ளார்.
அதற்கு அந்த விஜய் ரசிகர் இன்னும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் மழை பெய்கிறது என கேட்க அதற்கு பதிலாக “நாளைக்கு மழை பெய்யாது. ஏற்கனவே லேட்டாச்சு. தூங்குங்க நாளைக்கு ஸ்கூல் இருக்கு. குட் நைட் தம்பி” என கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதில்களை அஜித் ரசிகர்கள் சிலர் அந்த விஜய் ரசிகரை கிண்டல் செய்தும், ஆட்சியர் அஜித் ரசிகர் என்று சொல்லியும் பகிர்ந்து வருகின்றனர்.