மழையால் சேதமான டெல்டா விவசாயம்! – ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைப்பு!

வியாழன், 11 நவம்பர் 2021 (11:17 IST)
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் டெல்டா மாவட்ட பயிர்சேதம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், டெல்டா பகுதிகளில் கனமழையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் அடுத்த 2 நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்