கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலே அதிகப் போராட்டங்கள் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நாம் அறிந்த ஒன்று தான் இது சமீப காலமாக அரசுக்கு எதிராக தமிழகத்தில் அதிகப்படியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் சமீப காலமாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டம், மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராட்டம், விவசாயிகள் போராட்டம் நடந்தது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், சென்னை மெரினாவிலும் நடந்த போராட்டங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம், நெடுவாசல் போராட்டம், மீண்டும் விவசாயிகள் போராட்டம், மாட்டிறைச்சி போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், கதிராமங்கலம் போராட்டம் என தொடர்ந்து தமிழகம் போராட்டம் மிகுந்த மாநிலமாக உருவெடுத்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறையின் அறிக்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் அறிக்கைபடி இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிகப் போராட்டம் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரகாண்ட் உள்ளது.
உத்தரகாண்டில் கடந்த ஆண்டில் 21966 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 20450 போராட்டங்கள் நடந்துள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 47 என்ற அளவில் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.