10,11,12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (13:36 IST)
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வு காரணமாக 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும், ஜனவரி 19ம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்