எம்ஜிஆர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை! – தமிழக அரசு அறிவிப்பு!
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (11:33 IST)
நாளை முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிமுக கட்சியை தோற்றுவித்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை கிண்டி எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.