மாநிலத்தில் எலெக்ட்ரானிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக 100% வரிவிலக்கு அளிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து குடும்பங்களிலும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்த வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இயங்குவதால் அவற்றிற்கு தேவையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் எரிபொருளால் ஏற்படும் சுற்றுசூழல் மாசு ஆகியவையும் பிரச்சினையாக உள்ளன.
அதனால் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை வாங்க மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கு 2025ம் ஆண்டு வரை 100% வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.