தமிழக அரசின் ட்விட்டர் பக்கம் ஹேக்! க்ரிப்டோகரன்சி விளம்பரம்!

ஞாயிறு, 1 ஜனவரி 2023 (11:27 IST)
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் பல்வேறு நாட்டு அரசுகள், செய்தி தொடர்பு துறைகள், பிரபலங்கள் பலரும் கணக்கு வைத்துள்ள நிலையில், பல லட்சம் பேர் அவற்றை பின் தொடர்ந்து வருகின்றனர். அவ்வாறான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்து அதில் க்ரிப்டோகரன்சி விளம்பரங்களை வெளியிடுவது சமீபமாக அதிகரித்துள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை ட்விட்டரில் வெளியிட்டு வரும் செய்தி தொடர்புதுறையின் அதிகாரப்பூர்வ கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்த பதிவுகள் மாயமான நிலையில் க்ரிப்டோகரன்சி விளம்பரங்கள் தோன்றியுள்ளன. நள்ளிரவு 1.30 மணி அளவில் இது ஹேக் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ட்விட்டர் கணக்கை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்