கரையை கடந்தது பெய்ட்டி புயல்: தப்பித்தது தமிழகம்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (16:15 IST)
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த பெய்ட்டி புயல் இன்று ஆந்திராவில் கரையை கடந்தது. தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இன்றி புயல் கரையை கடந்ததால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி விசாகப்பட்டணம் மற்றும் காக்கிநாடாவிற்கு இடையே கரையை கடந்தது. ஏற்கனவே ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. 
 
புயல் கரையை கடந்த போது மணிக்கு 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், புயல் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் தெற்கு ஒடிசாவில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக பல்வேறு நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது மீட்கப்பட்டு வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்