பெய்ட்டிப் புயலால் தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

திங்கள், 17 டிசம்பர் 2018 (14:08 IST)
ஆந்திராவில் இன்று கரையைக் கடக்கும் பெயிட்டி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ‘பெய்ட்டி’ புயல், தற்போது காக்கிநாடாவுக்கு தெற்கே சுமார் 130 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ளது. அங்கிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து காக்கிநாடாவிற்கு அருகே, கரையை கடக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இது சம்மந்தமாக இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் ‘புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வரையும், அதிகபட்சமாக 100 கி.மீ. வரையும் காற்று வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.. புயல் நமக்கு அருகில் கரையை கடந்து சென்றபோது(நேற்று), வடதிசையில் இருந்து காற்று அதிகமாக வீசியதால், நேற்று முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சென்னையில் நேற்று வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாகப் பதிவானது.  எனவே 3 நாட்களுக்கு மழை இருக்காது வறண்ட வானிலையே நிலவும். அதன் பிறகு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன் காரணமாக மழை பெய்யக்கூடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்