வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (11:25 IST)
தமிழகத்திற்கான ஆண்டு பட்ஜெட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் ஆகஸ்டு 13 அன்று முதல் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்கும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “திமுக ஆரம்பம் முதற்கொண்டே விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனைகளை ஏற்று அன்றே தமிழக விவசாயிகளுக்கு பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் முதல்வர் கருணாநிதி. அதனாலேயே வேளாண் துறை பெயர் மாற்றப்பட்டு வேளாண் மற்றும் உழவர்கள் நலத்துறை என அமைக்கப்பட்டது. 13ம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்