இஷ்டத்திற்கு உடை உடுத்துவது தான் பெண்ணுரிமையா? : தமிழிசை செளந்திரராஜன்

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (15:52 IST)
இஷ்டத்திற்கு உடை உடுத்துவது பெண்ணுரிமை அல்ல என்றும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் படித்து வாழ்க்கையில் முன்னேறுவது தான் பெண்ணுரிமை என்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் பெண்ணுரிமை என்பதை பலர் தவறாக புரிந்து வைத்துள்ளனர் என்றும் பெண்ணுரிமை என்பது இஷ்டத்திற்கு ஆபாசமாக உடை உடுத்துவது அல்ல என்றும் பெண்கள் நாகரீகமாக உடை அணியவேண்டும் என்றும் அவர் கூறினார் 
 
ஆண்களுக்கு நிகராக பெண்கள் படித்து நல்ல வேலையில் சேர்வது தான் பெண்ணுரிமை என்றும் அதனை நோக்கியே பெண்களின் பயணம் இருக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்