உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (15:48 IST)
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகும் என இமெயில் வந்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அவசர அவசரமாக தாயகம் திரும்பினார்கள். இந்த நிலையில் மாணவர்களின் படிப்பில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதற்காக அடுத்த வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக உக்ரைன் பல்கலைக்கழகத்திலிருந்து ஈமெயில் வந்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
 
மேலும் போர் முடிந்தவுடன் மாணவர்கள் மீண்டும் உக்ரைன் வந்து தங்களது படிப்பை தொடரலாம் என்றும் இமெயிலில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்