சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

Mahendran

சனி, 26 ஏப்ரல் 2025 (10:26 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்திற்கு சென்றது என்பதும் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. ஆனாலும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெள்ளியின்  விலை சற்று உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரு சவரன் ரூ. 72,040-க்கும் ஒரு கிராம் ரூ. 9,005-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதனிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 112-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்