பேனர் குறித்த நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம்: தமிழிசை

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:29 IST)
உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர்கள் வைக்க கூடாது என்று நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அடுத்து திருச்சியில் நேற்றுக்குள் முதல்வர் கட்-அவுட் உள்பட அனைத்து கட்-அவுட்டுக்களையும் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது



 
 
பேனர், கட்-அவுட் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவால் அனைத்து அரசியல் கட்சியினர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீமான் உள்பட பல அரசியல் தலைவர்கள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து தற்போது பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் கருத்து தெரிவித்துள்ளார்
 
இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட் அவுட், பேனர் குறித்த நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்துவது கேள்விக்குறி தான் என்றும் இந்த உத்தரவை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்