நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் திருச்சியில் பேனர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி

வியாழன், 26 அக்டோபர் 2017 (11:02 IST)
சமீபத்தில் பேனர்கள் குறித்த வழக்கு ஒன்றில் உயிருடன் இருப்பவர்கள் யாருக்கும் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்கக்கூடாது என்றும் இதனை தலைமை செயலாளர் கண்காணிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.



 
 
ஆனால் தமிழகம் முழுவதும் பல நகரங்களில் தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை அடுத்து நகரின் பல பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, 'திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து மாலை 4 மணிக்கு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்