நான் பொங்கினால் தமிழ்நாடு தாங்காது: பொங்கிய தமிழிசை

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (15:10 IST)
நாங்கள் பொங்கினால் தமிழ்நாடு தாங்காது என தமிழிசை சவுந்தராஜன் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
நேற்று ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த மண் என்பதால் ரத யாத்திரை தமிழகத்திற்கு வரக்கூடாது என கூறியிருந்தார்.
 
இதற்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
 
”நாங்கள் பொங்கினால் தமிழ்நாடு தாங்காது. ரதயாத்திரை பிரச்சனை கிடையாது? ரத யாத்திரை வருவது தான் பிரச்சனை. இந்துக்களின் வாக்கு மட்டும் வேண்டும் ரதயாத்திரை வேண்டாமா, இந்து மதத்தை பற்றி பேசுபவர்கள் இனி அச்சபட வேண்டும், பெரியார் பிறந்தது பெரிதா அல்லது நாயன்மார்கள், ஆழ்வார்கள் பிறந்தது பெரிதா என வருங்காலத்தில் பார்போம். திராவிட நாடு என்றால் என்ன? தமிழ்நாடு என்றால் என்ன? என்பது ஸ்டாலினுக்கு சந்தேகம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்