தமிழகத்தில் நுழைந்திருக்கும் ரத யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு

புதன், 21 மார்ச் 2018 (07:20 IST)
கடும் எதிர்ப்புகளிக்கிடையே தமிழகத்திற்கு வந்துள்ள ரத யாத்திரைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த மாதம் ராமராஜ்ய ரதயாத்திரை புறப்பட்டது. ரதயாத்திரை மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகம், கேரள ஆகிய மாநிலங்களை கடந்து  நேற்று தமிழகத்திற்கு வந்தடைந்தது.
 
தமிழகத்திற்குள் இந்த ரத யாத்திரை நுழைய அதிமுகவினரை தவிர மற்ற எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரத யாத்திரை தடுப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டனர்.  144 தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமான் உள்பட்ட போரட்டம் நடத்திய அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 
இந்நிலையில் ரத யாத்திரைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக  டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்