டீசல் ஹோம் டெலிவரி செய்யப்படும்; இந்தியன் ஆயில் அதிரடி முடிவு

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (14:52 IST)
இந்தியன் எண்ணெய் நிறுவனம் டோர் டெலிவரி மூலம் டீசலை வீட்டிற்கே கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 
இந்தியாவின் முன்னணி நிறுவனமான இந்தியன் எண்ணெய் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி டீசலை வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
 
இதற்காக டிஸ்பென்ஸர் பொருத்தப்பட்டுள்ள டீசல் டேங்கர் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. இந்த வாகனத்தின் புகைப்படத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
 
இந்த சேவை முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. டோர் டெலிவரி சேவையில் டீசல் மட்டுமே அளிக்கப்படும். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்