சட்டசபையில் கெத்து காட்டிய தமிமுன் அன்சாரி; வைரலாகும் வீடியோ காட்சி

செவ்வாய், 20 மார்ச் 2018 (15:45 IST)
ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தமிமும் அன்சாரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி வைரலாகிறது.
ரத யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கினால் சமூகம் சார்ந்த கலவரங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகியோர் நேற்று சபாநாயகரிடம் தெரிவித்தனர். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்க மறுக்கவே கருணாஸ் உட்பட 4 பேரும் நேற்று சட்டசபையில் இருந்து வெளியேறினர்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிளம்பிய ராமராஜ்ய ரதம் மகாராஷ்டிரா, கேரள உள்பட ஒரு சில மாநிலங்களை கடந்து தமிழகத்தின் எல்லையான நெல்லை மாவட்டத்தில் உள்ள கோட்டை வாசல் பகுதிக்கு வந்தடைந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இன்று கூடிய சட்டசபையில் இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது தமிமுன்அன்சாரி சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக கோஷமிட்டபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின் அவைக்காவலர்கள் அவரை வெளியேற்றினர். அவர் தர்ணாவில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்