ஆளுனர் திருப்பி அனுப்பிய ஆன்லைன் தடை மசோதா.. தமிழக அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:00 IST)
ஆன்லைன் தடை மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில் நேற்று கூடிய தமிழக அமைச்சரவையில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து வருவதை அடுத்து ஆன்லைன் தடை மசோதா கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 
 
இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இந்த மசோதாவை கவர்னர் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடியது. 
 
இந்த அமைச்சரவை   கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. 
 
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மீண்டும் ஆன்லைன் தலை மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்