5 நிமிடத்தில் ஆட்டோ அல்லது ரூ.50 கேஷ்பேக்" போன்ற விளம்பரங்கள் மூலம் ரேபிடோ', வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதமான சேவைகளை வழங்குவதாக விளம்பரம் செய்தது. ஆனால், வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ.50 பணமானது, ரொக்கமாக வழங்கப்படாமல், ரேபிடோ நாணயங்களாக' மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்கள், பைக் சவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவை, ஏழு நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், மேலும் அவற்றின் மதிப்பை கட்டுப்படுத்தும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நியாயமற்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் அதே சேவையை பயன்படுத்தும்படி நிறுவனம் கட்டாயப்படுத்தியதாக CCPA தெரிவித்துள்ளது.