காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவா மற்றும் அவரது கணவர் ஞானம், தங்கள் நண்பரின் மகனின் திருமண விழாவிற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். இந்த திருமண வரவேற்பில், பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேல்முருகனின் இசை நிகழ்ச்சி நடந்தபோது, மேடை ஏறி நடனமாட சிலரை அழைத்துள்ளார். அப்போது, மேடை ஏறி நடனமாடிய ஜீவா திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டும் அவர் சுயநினைவுக்கு திரும்பாததால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.