வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

Siva

புதன், 20 ஆகஸ்ட் 2025 (18:04 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S சீரிஸ் உலகின் மிகவும் பிரபலமான ஃபிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், சாம்சங் தனது புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில், வரவிருக்கும் கேலக்ஸி S26 தொடர் குறித்து பல்வேறு சில தகவல்கள் பரவி வருகின்றன.
 
சாம்சங் நிறுவனம் அதன் Flex Magic Pixel தொழில்நுட்பத்தை வரவிருக்கும் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
 
Flex Magic Pixel தொழில்நுட்பம், பயனர்கள் பொது இடங்களில் வங்கி செயலிகள் போன்ற ரகசியமான செயலிகளை திறக்கும்போது, ஃபோனின் திரையின் பார்வை கோணங்களை மாற்றியமைக்க AI-ஐப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், அருகில் இருப்பவர்கள் திரை என்ன காட்டுகிறது என்பதை பார்க்க முடியாமல் தடுக்கிறது. இது பயனர்களுக்கு அதிக ரகசியத்தன்மையை வழங்குகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்