பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி செய்துள்ளது தமிழக உள்துறை- பாஜக குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:38 IST)
செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி இருந்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த  ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சிறப்பாகச்  செய்திருந்தது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால்,  பிரதமர் வருகையையொட்டி 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதாகவும்,

ALSO READ: பிரதமருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு – சென்னை முழுவதும் போலீஸார் குவிப்பு!
தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 காவல் அடுக்காக நின்று பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்க்கு தமிழகம் வந்த பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் பாதுகாப்பில் குளறுபடி செய்துள்ளது தமிழக உள்துறை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்