நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

Mahendran

சனி, 26 ஏப்ரல் 2025 (15:59 IST)
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்த பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது, "பழி போடும்  விளையாட்டுகளுக்கு பஹல்காம் தாக்குதல் இன்னொரு உதாரணமாகி விட்டது. இத்தகைய சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு பொறுப்புள்ள நாடாக, வெளிப்படையாகவும் நியாயமான முறையிலும் விசாரணை செய்ய பாகிஸ்தான் தயாராக இருக்கிறது" என்றார்.
 
 பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் முதலில் விளக்கம் அளித்தார். ஆனால், பின்னர், கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வந்தது என்ற உண்மையை அவர் நேரடியாக ஒப்புக்கொண்டார்.
 
மேலும், இந்த தாக்குதலுக்கு 'லஷ்கர்-ஏ-தொய்பா' அமைப்பின் கிளையான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றதாக செய்திகள் வெளியானது. எனினும், அந்த அமைப்பின் தலைமை, இச்சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்