டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் ஹேக் : 200 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி கேட்டு மிரட்டல்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:37 IST)
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி கேட்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய தளத்தில் திடீரென வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த சர்வர் ஹேக் செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளத்தை ஹேக் செய்துள்ளதாகவும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி அளித்தால் மட்டுமே அந்த இணையதளத்தை பாதுகாக்க முடியும் என்றும் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதால் இண்டர்நெட் சேவை முடங்கி உள்ளதாகவும் இதனால் நோயாளிகளின் தகவல்களை பயன்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ரூ.200 கோடி மதிப்பு கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கேட்டுள்ளதை அடுத்து இந்திய அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்