பாஜக எம்பிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திங்கள், 28 நவம்பர் 2022 (17:10 IST)
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பிக்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2009ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரிகள் மீது கற்களை வீசியதாக அம்மாநில பாரதிய ஜனதா எம்பி ஆர்கே சிங் பட்டேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் போலீசார் மீது கற்களை வீசிய பாஜக எம்பி ஆர்கே சிங் பட்டேலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது 
 
இந்த சம்பவத்தில் அவருடன் சேர்ந்து கற்களை வீசிய 19 பேர்கள் குற்றவாளி என நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பளித்தார். ஆர்கே சிங் பட்டேல் உட்பட 15 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் மூன்று பேருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்