பணியை ராஜினாமா செய்த தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர்: அதிர்ச்சி காரணம்..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (10:15 IST)
தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் என்ற பெருமை பெற்ற காவலர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகர காவல் துறையில் திருநங்கை நஸ்ரியா என்பவர் பணிபுரிந்து வந்தார் என்பதும் தமிழகத்தில் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது காவலராக பணியாற்றி வந்த இவர் திடீரென தனது பணியை ராஜினாமா செய்து உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
காவலர் ஒருவர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தால் கோவைக்கு மாற்றப்பட்ட காவலர் நஸ்ரியா அதன் பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென ராஜினாமா செய்த அவர் செய்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தனக்கு பல்வேறு அத்துமீறல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தற்கொலை எண்ணங்களை தூண்டும் அளவுக்கு தான் இருப்பதாகவும் இருப்பினும் அதனை கடந்து பணி செய்து கொண்டிருந்தேன் என்றும் தெரிவித்தார். 
 
எனது பாலினம் குறித்து காவல்துறையிரேரை இழிவாக பேசுகிறார்கள் என்றும் மனரீதியாக டார்ச்சர் செய்ததால் இனிமேல் என்னால் காவல்துறையில் பணிபுரி முடியாது என்று ராஜினாமா செய்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் ராஜினாமா முடிவை காவலர் நஸ்ரியா மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்