ஸ்விகி நிறுவனத்தின் ஊழியர்கள் திடீய்ரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆன்லைன் உணவு வி நியோக்கிக்கும் பிரபல நிறுவனமான ஸ்விகியில் இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்விகி நிறுவனம் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பழைய நடைமுறைகளே தொடர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஸ்விகி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,வாடிக்கையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.