பிரதமரை சந்திக்க டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி: திடீர் திருப்பம் ஏற்படுமா?

திங்கள், 19 செப்டம்பர் 2022 (17:04 IST)
பிரதமர் மோடியை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுவதால் அதிமுகவில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
முன்னாள் தமிழக முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக பொதுச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் அதிமுகவை கைபற்ற சசிகலா தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இன்று அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதால் நாளை சேலம் செல்ல திட்டமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நாளை பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினால் அது அதிமுகவின் உட்கட்சி மோதல் விவகாரமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்