வி.சி.க.,வின் சமூகநல்லிணக்க_மனிதசங்கிலிக்கு ஆதரவு- நடிகர் கருணாஸ்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (17:35 IST)
விசிகவின் சமூக நல்லிணக்ககத்திற்கு மனித சங்கிலி பேரணிக்கு ஆதரவு என புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ்  தெரிவித்துள்ளார்.
 
அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு  நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்

 இந்த நிலையில்,  பிரபல சினிமா நடிகரும், புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ், தமிழ்ச் சமூகத்தைச் சீர்குலைக்க நினைக்கும் சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடை செய்ய  குரல் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திருமாவளனவன் தலைமையிலான விசிகவின் சமூக நல்லிணக்ககத்திற்கு மனித சங்கிலி பேரணிக்கு ஆதரவு எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்