குடிநீர் டேங்க்கில் கலக்கப்பட்ட மலம்; மக்கள் வாந்தி, மயக்கம்! – புதுக்கோட்டையில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:36 IST)
புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் டேங்க்கில் மர்ம ஆசாமிகள் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவாசல் என்ற பகுதியில் இறையூர் வேங்கைவாசல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கு ஒரு குடிதண்ணீர் டேங்க்கும் கட்டப்பட்டு புழக்கத்தில் உள்ளது.

சில நாட்களாக டேங்க் தண்ணீரை குடித்த மக்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. குடி தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதால் டேங்க்கை திறந்து பார்த்தபோது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்தது அம்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடனடியாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு டேங்க் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்