தொழிலதிபர் கழுத்தறுத்து கொலை; நகைகள், பணம் கொள்ளை! – அறந்தாங்கியில் அதிர்ச்சி!

திங்கள், 25 ஏப்ரல் 2022 (08:25 IST)
அறந்தாங்கியில் தொழிலதிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம். ஆப்டிக்கல்ஸ் கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவியுடன் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள பள்ளிவாசல் சென்று தொழுதுவிட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த முகமது நிஜாமை திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே நிஜாம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

வீட்டிற்கு உள்ளே புகுந்த மர்ம கும்பல் நிஜாமின் மனைவியை கட்டிப் போட்டு பீரோவில் இருந்த 100 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் நேரில் சென்று நிஜாமின் உடலை கைப்பற்றி பிரேச பரிசோதனைக்கு அனுப்பியதுடன், கொள்ளையடித்த மர்ம கும்பல் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்