விநாயகர் சதுர்த்திக்கு தடை; பொம்மை தயாரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (13:28 IST)
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சிலை தயாரிப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் பலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பு சங்கத்தினர் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொழிலாளர்கள் வங்கியில் பெறப்பட்டுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்