மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி ...அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் !

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (20:40 IST)
மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி ...அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார் !
கரூரில் 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி - போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
 
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான 2 நாட்கள் நடைபெறும் ஆண்கள் கபடி போட்டி இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் வடக்கு நகர அதிமுக சார்பில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று மகளிர்க்கான மாநில அளவிலான கபாடி போட்டிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இந்த வாரம் சனிக்கிழமை ஆண்கள் கபடி போட்டி தொடங்கியது. பூஜையுடன் துவங்கிய இந்த போட்டியினை தமிழக  போக்குவரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில், கரூர்,  ஈரோடு,  திருச்சி, கோவை,  மதுரை,  சென்னை,  திண்டுக்கல்  போன்ற  தமிழகம்  முழுவதும்  இருந்து  55 க்கும் மேற்பட்ட அணிகள் இந்த போட்டியில் பங்குபெற்று விளையாடி வருகின்றன. முற்றிலும் நாக்-அவுட் முறையில் 85 கிலோ எடைப்பிரிவில் நடைபெறும் இந்த போட்டிகள் கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த போட்டியின் பரிசளிப்பு விழா மார்ச் 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்