140 படுக்கைகளுடன் கொரோனா சித்த மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவேகமாக அதிகரித்து வருவதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடமில்லாத நிலை உள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் 140 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஒன்று கடந்த சில நாட்களாக அமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பணி முழுமை அடைந்துள்ளது.
இதனையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 140 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். இதில் 70 சித்த மருத்துவ படுக்கைகளும் 70 அலோபதி மருத்துவ படுக்கைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் விருப்பப்படி சித்த மருத்துவம் அல்லது அலோபதி மருத்துவத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது