அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு காரணமாக, இன்று பிளாக் மண்டே என மாற வாய்ப்பு இருப்பதாகவும், 37 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை சரியலாம் என்றும் கூறப்பட்டது.
அது உண்மை எனும் வகையில், இந்திய பங்குச்சந்தை சுமார் 3,000 புள்ளிகள் வரை சரிந்து, சென்செக்ஸ் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 2,765 புள்ளிகள் சரிந்து, 72,710 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 900 புள்ளிகள் 22,000 அளவில் வர்த்தகம் செய்கிறது.