அடடே சூப்பரா இருக்கே… தமிழக அரசு அறிவிப்பால் தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு குறையும் கட்டணம்!

செவ்வாய், 11 மே 2021 (11:49 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வரானதும் கையெழுத்திட்ட கோப்புகளில் முதன்மையானது பெண்களுக்கு நகர சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் அறிவித்தது.

இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்கள் வேலைக்கு செல்லவும், வேலையில் இருந்து திரும்பி வரவும் ஆகும் செலவு சுத்தமாக இல்லாமல் ஆனது. பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த திட்டம் பெற்றது. இதனால் பெண்கள் இனிமேல் காத்திருந்தாலும் பரவாயில்லை அரசு பேருந்தில் செல்லலாம் என்ற முடிவை எடுப்பார்கள் என்பதால், தனியார் பேருந்துகளும் பெண்களுக்கான டிக்கெட் விலையை குறைக்க ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த எஸ்.எம்.ஆர். என்ற பேருந்து நிறுவனம் மகளிருக்கு கட்டணச் சலுகை அளித்திருக்கிறது. 10 ரூபாய் கட்டணம் என்றிருந்த பயணத்துக்கு 2 ரூபாய் என அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 80 சதவீதம் விலைக்குறைப்பை மேற்கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்