மதுசூதனன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (19:09 IST)
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் இன்று காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் அறிக்கை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அதில் அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்துக்கும் உள்ளானேன் என்றும் அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்றவர் என்றும் அவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர்த்த பட்டவர் என்றும் அதிமுக அவைத் தலைவராகப் பணியாற்றியவர் கட்சியின் வளர்ச்சிக்கு பட்டி தொட்டிகள் வரை பாடுபட்டவர் என்றும் அப்படிப்பட்ட முன்னோடி தலைவர் இறந்திருப்பது பேரிழப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மதுசூதனன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்