மதுசூதனன் கவலைக்கிடம்: புதிய அவைத்தலைவரை தேர்வு செய்ய ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:02 IST)
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20 ஆம் தேதியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் தேறி வருவதாக சமீபத்தில் செய்தி வெளிவந்த போதிலும் இன்று காலை மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
இதனை அடுத்து அதிமுக பிரமுகர்கள் மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக புதிய அவைத்தலைவரை தேர்வு செய்ய ஓபிஎஸ் ஈபிஎஸ் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மதுசூதனன் உடல்நிலை தேறி வந்தாலும் முழுவதுமாக ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவின் புதிய அவை தலைவர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை ஆகியோர் பெயர்கள் புதிய அவைத்தலைவர் பட்டியலில் உள்ளனர் கூறப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்