ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (18:07 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி நேரங்களில் அதிக விடுமுறை நாட்கள் கிடைக்கும் என்பதால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். இதனை அடுத்து தெற்கு ரயில்வே விழாக்கால சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்யும் என்பதும் ஏராளமான பேருந்து கொள்ளும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரெகுலர் ரயில்கள் ஓடத் தொடங்காத நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டுமே அவ்வப்போது ஓடி வருகிறது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி ஆயுதபூஜை வரவிருப்பதை அடுத்து அதற்கான சிறப்பு ரயிலையும் அடுத்த மாதம் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அதற்கான சிறப்பு ரயில்கள் குறித்த தகவலையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதே போல் நவம்பர் 12 13 ஆகிய தேதிகளில் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்குரயில்வே அறிவித்துள்ளது
 
அதேபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 26, 27 மற்றும் நவம்பர் 1, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் இதற்கான முன்பதிவுகள் நாளை முதல் தொடங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்