அப்படிச் செய்ததால் உயர்ந்து நிற்கிறார் ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் பாராட்டு

வியாழன், 15 அக்டோபர் 2020 (17:48 IST)
ரஜினி தன் தவற்றை ஒப்புக்கொண்டது அவரது ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்துகிறது எனத் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்திற்கு 6.5 லட்சம் விதிக்கப்பட்டிருந்த வரியைத் குறைக்க வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கடுமையான கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து மனுவை வாபஸ் பெற்ற ரஜினிகாந்த் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் நீதிமன்றத்துக்குச் சென்றது தவறுதான் என்றும் சென்னை மாநகராட்சியில் மேல்முறையீடு செய்து இருக்கலாம் என்றும் டுவிட் செய்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மாநகராட்சி விதித்த 6.5 லட்சம் சொத்து வரியை ரஜினிகாந்த் கட்டி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சொத்து வரியை கட்டுவதற்கு இன்றுதான் கடைசி நாள் என்பதால் கடைசி நாளில் அந்த வரியை ரஜினிகாந்த் கட்டியுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது

இந்நிலையில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன் தவற்றை ஒப்புக்கொண்டது அவரது ஆளுமைத் தன்மையை வெளிப்படுத்துகிறது எனத் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு தவறை வெளிப்படியாக ஒப்புக் கொள்வதில் தான் சிறந்த மனிதத்தன்மை/ஆளுமை வெளிப்படுகிறது. அப்படி செய்து உயர்ந்து நிற்கிறார் @rajinikanthசார். #அனுபவமே_பாடம் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்